கோலாலம்பூர் | 11/7/2021 :-
பயிற்சி மருத்துவர் மருத்துவமனை, கிள்ளான் பள்ளத்தாகுப் பகுதிகள் (தலைநகர்)
ஒரு முறை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கோவிட்-19 தொற்று கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் சுவாச உதவிக் கருவிகள், சிறுநீரகச் சுத்திகரிப்பு இயந்திரம் போன்ற கருவிகளின் உதவி தேவைப்படும் நிலையில் இருந்தது. ஆனால், அக்குடும்பத்தின் பலர் உயிரிழந்தனர்.
வார்டுகளில் அனுமதிக்கப்பட இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருக்கின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உதவிக் கருவிகளின் தேவை உள்ளன.
தற்போது மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகள் மிகவும் மோசமான நிலையில் வருகிறார்கள். அவர்களுக்கு சுவாச உதவிக் குழாய் தேவைப்படுகிறது.
அதே நேரத்தில், கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்க முடியாமல் போனது.
மிகத் தாமதாம நோயாளிகள் மருத்துவமைக்கு வருவதால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் விட்டிலிருந்து பணிக்கு வரும் முன்களப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் காப்பாற்ற முடியாத நிலையில் இருப்பவருக்கு சிகிச்சையை நிறுத்தி விடலாம் எனச் சிந்திக்க வேண்டியக் கட்டாயத்தில் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். அவ்விடம் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் வேறொரு நோயாளிக்கு வழங்கலாம் என்பதால் அவ்வாறு சிந்திக்க வேண்டியுள்ளது எனக் குறிப்பிடுகின்றனர். அடிக்கடி நடக்கும் இவ்வாறான சூழலால் உளவியல் நிலையில் பல முன்களப் பணியாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
உற்சாகமும் உத்வேகமும் குறைந்து வருகிறது. இருந்தும், மிகச் சிறந்த சிகிச்சை வழங்க முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால், முன்பைக் காட்டிலும் மோசமான நிலையில் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். தனியாள் பாதுகாப்பு உடையணிந்து தொடர்ந்து பல மணி நேரம் பணியாற்றுவது மிகுந்த சோர்வை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகின்றனர்.
இன்னும் எவ்வளவு நாள் நாங்கள் தாக்குப் பிடிக்க முடியும் என ங்களுக்குத் தெரியவில்லை. பல முன்களப் பணியாளர்கள் மனம் விட்டு அழும் நிலைக்கும் மிகுந்த கோபமாகவும் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
பகுதி 1க்கு இங்கே சொடுக்கவும்.
http://www.anegun.com/?p=48271
பகுதி 2க்கு இங்கே சொடுக்கவும்.
http://www.anegun.com/?p=48279
பகுதி 3க்கு இங்கே சொடுக்கவும் http://www.anegun.com/?p=48288

