கோலாலம்பூர் | 11/7/2021 :-
‘தமிழர்’ மனித குலத்தில் மண்டிக்கிடக்கும் ‘சாதி’ பொருந்தாத பழக்க வழக்கங்கள், பொருளற்ற; அறிவுக்குப் பொருந்தாத சம்பிரதாயங்கள், அறியாமை, மூடநம்பிக்கை போன்றவைகளையும் ஒழிக்க ஊடகங்கள் குறிப்பாக; தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களும் அதன் உரிமையாளர்களும் முன்வரவேண்டும் என மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக. பஞ்சு கூறியுள்ளார்.
அதைவிடுத்து பத்திரிகையாளர்களே சாதியை ஊக்குவிப்பவர்களாகவும் அதனை வளர்ப்பவர்களாகவும் இருக்கக் கூடாது. சாதிய சிந்தனையுடையவர்கள் எப்படி தமிழ்ச்சமுதாயத்தின் ஒற்றுமையைப் பேணுவார் என கேவி எழுப்பியுள்ளார்.
சாதியை ஒழிக்க முயற்சிகளை மேற்கொள்ளும் ஊடகங்களுக்கு மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் எப்போதும் துணைநிற்கும் என அவர் உறுதி கூறியுள்ள்ளார்.
இணைந்தே சாதி எனும் சனியனை ஒழிப்போம் என நாக. பஞ்சு அனைவரையும் இணையக் கூறியுள்ளார்.

