கோலாலம்பூர் | 11/7/2021 :-
தனியார் மருத்துமனைகள்
– டாக்டர் குல்ஜித் சிங், தலைவர் – மலேசியத் தனியார் மருத்துவமனைகள் சங்கம்
தற்போது தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நிறைந்து விட்டது. காரணம் குறிப்பிட்ட (அந்தந்த) மருத்துவமனையின் கொள் அளவைக் கொண்டுதான் நோயாளிகளை ஏற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்க முடியும்.
உறுதியளித்ததை விட அதிகமான நோயாளிகளைத் தற்பொழுது தனியார் மருத்துவமனைகள் கொண்டிருப்பதாக மலேசியத் தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் குல்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமலேயே தீவிர சிகிச்சைப் பிரிவை திறந்துள்ளோம். அவ்விவகாரம் அமைச்சிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கூடுதல் கட்டில்கள் இன்னும் கண்காணிக்கப்படவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவை திறந்திருந்தாலும் தனியார் மருத்துவமனையின் கொள் அளவு 100 விழுக்காட்டை எட்டியுள்ளது.
இம்மருத்துவமனையின் ஊழியர்கள் தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல ஆணையிடப்பட்டுள்ளனர். மேலும், தனியே அதே மருத்துவமனையில் தடுப்பூசி மையமும் செயல்பட்டு வருகிறது. இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் பணியாற்றுவது மிகவும் சிரமம்.
கோவிட்-19 தொற்று கண்டுள்ள 1ஆம் முதல் 5ஆம் கட்ட நோயாளிகளுக்கு எவ்வளவு முடியுமே அந்த அளவுக்கு சிகிச்சை வழங்குகிறோம்.
பொதுச் சுகாதார வசதிக்காக தனியார் மருத்துவமனையின் ஊழியர்களைப் பணியாற்ற சித்தமாக இருக்கிறோம். பொது மருத்துவமனையில் இருந்து கோவிட்-19 அல்லாத நோயாளிகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகவும் உள்ளோம்.
அதிகப்படியானக் கட்டில்களை ஏற்படுத்துவதை விட பிரச்சனையின் வேரை ஆராய்ந்து அதனை முழுதாக அறுத்தெரிய வேண்டும். குறிப்பாக அதிகரித்து வரும் கோவிட்-19 நேர்வுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளான தடுப்பூசி போடப்படுவதை அதிகரிக்கவும் தொற்று கண்டவர்களை தனிமைப்படுத்துவதையும் விரைந்து முன்னெடுக்க வேண்டும்.
அதிகமான சிகிச்சை இடங்களையும் கட்டில்களை ஏற்படுத்தி விடலாம். ஆனால், நேர்வுகள் அதிகரித்து வந்தால் எவ்விதப் பயனும் இல்லை என மலேசியத் தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் குல்ஜித் சிங் குறிப்பிட்டார்.
பகுதி 1க்கு இங்கே சொடுக்கவும்.
http://www.anegun.com/?p=48271
பகுதி 2க்கு இங்கே சொடுக்கவும்.
http://www.anegun.com/?p=48279
பகுதி 3க்கு இங்கே சொடுக்கவும் http://www.anegun.com/?p=48288
பகுதி 4க்கு இங்கே சொடுக்கவும்
http://www.anegun.com/?p=48302

