ஜோர்ஜ் டவுன் | 12/7/2021 :-
இணைய வழி பொருட்கள் வாங்கும் – விற்கும் தளமான LAZADA MALAYSIAவின் ஜார்ஜ் டவுன் கிளை மூடப்பட்டது எனவும் அங்கு கோவிட்-19 நேர்வுகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என சமூக ஊடகத்தில் அதன் அறிக்கையின் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில், LAZADA MALAYSIAவின் ஜார்ஜ் டவுன் கிளை மூடப்பட்டது தொடர்பில் பொது மக்களுக்குத் தவறான புரிதல் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த அந்நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
அந்தக் கிளை கடந்த 9ஆம் நாள் மூடப்பட்டு அதன் எஸ்.ஓ.பி. மேம்படுத்தும் நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளின் அறிவிவுறுத்தலை அடிப்படையாகக் கொண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.
கடந்த 9ஆம் நாள் முதல் 15ஆம் நாள் வரை அது மூடப்பட்டுள்ளது.
அக்கிளை மூடப்பட்டாலும் அவ்வட்டாரத்தில் பொருட்கள் விநியோகம் தடைபடாது.
அன்றாட சுகாதாரப் பதிவு, உடல் வெப்பநிலை பரிசோதனை, கூடல்ல் இடைவெளி, பாதுகாப்பு கவசம் அணிவது, ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு ஆகியவற்றோடு தொற்று நீக்கப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த அதிகாரத்துவத்திரை ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

