Site icon அநேகன்

பதவி துற! யாரைக் குறிப்பிடுகிறார் நஜீப்

கோலாலம்பூர், ஜூலை 13-


கோவிட் 19 நேர்வுகள் இன்று உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சுகாதார அமைச்சின் தகவலை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் பதவி துற என்றும் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டு வருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் நடப்பு அரசாங்கத்தின் செயல்பட்டால் தான் இந்த எண்ணிக்கை உயர்வு என்பதைப் பலர் சாடி வருகிறார்கள்.

அது குறித்தும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பதவி துற என்று குறிப்பிட்டுள்ள நஜீப் நேரடியாகப் பிரதமர் குறி வைத்துப் பேசினாரா? அல்லது சுகாதார அமைச்சரையா என்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Exit mobile version