புத்ராஜெயா | 13/7/2021 :-
மலேசியாவில் இன்று 11,079 பேருக்குப் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 9,000க்கும் மேற்பட்ட நேர்வுகளே மலேசியாவின் மிக அதிகமான அன்றாடப் பதிவாக இருந்தது. ஆனால், தர்பொழுது அவ்வெண்ணிக்கை 11,000ஐக் கடந்துள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 855,949 -ஐ எட்டியுள்ளது.
இன்று கோவிட்-19 பெருந்தொற்றால் 125 பேர் பலியானர். அதனால் தற்போது மொத்த மரண எண்ணிக்கை இது வரையில் 6.385 ஆக உயர்ந்துள்ளது.
தற்பொழுது 972 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 456 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று 5,990 பேர் குணமடைந்துள்ள வேளையில் 753,328 பேர் மொத்தமாக இந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.

