Site icon அநேகன்

கோவிட்-19: 38 வாரம் கொண்ட குழந்தை மரணம் ! தீவிர சிகிச்சைப் பிரிவில் தாயார் !

கோலாலம்பூர் | 14/7/2021 :-

கோவிட்-19 பெருந்தொற்றால் 38 வாரமே ஆன ஆண் குழந்தை ஒன்று பலியானது. அக்குழந்தையின் தாயார் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக்க கூட்டரசுப் பிரதேச இசுலாம் சமய இலாகா தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது.

தனது அடக்கம் செய்யக் கிடைக்கப் பெற்றதிலேயே மிகவும் வயது குறைந்த சடலம் இந்தக் குழந்தை எனவும் அச்சடலம் தாமான் செலசே, ரௌதாத்தூல் சக்கினா கோலாலம்பூர் – காராக் இசுலாமிய இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவ்விலாகா கூறியது.

மேலும், அக்குழந்தையின் குழந்தையும் இதர 8 குழந்தைகளும் தற்போது தங்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருகிறார்கள்.

Exit mobile version