Site icon அநேகன்

50 குடும்பங்களுக்கு சபாக் பெர்ணாம் திருமுருகன் ஆலயம் உணவு – மளிகை பொருட்களை வழங்கியது !

சபாக் பெர்ணாம் | 19/7/2021 :-

இங்குள்ள திருமுருகன் ஆலய ஏற்பாட்டிலும் சிலாங்கூர் மாநில அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு வீ. கணபதி ராவ் அவர்களின் “அட்சய பாத்திரம்” திட்டத்தின் ஆதரவிலும் 50 குடும்பத்தினருக்கு உணவு – மளிகை பொருட்கள் வழங்கும் வழங்கப்பட்டன.

நேற்று இந்த நிகழ்சு ஆலய வளாகத்தில் முறையான எஸ்.ஓ.பி.யுடன் நடந்ததாக அதன் தலைவர் உயர்திரு ரா. முனியாண்டி PPC தெரிவித்தார்.

குறிப்பாக கோவிட்19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையால் வருமானம் பாதிக்கப்பட்டோருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன என அவர் மேலும் கூறினார்.

Exit mobile version