காங்கார் | 20/7/2021 :-
பெர்லிஸ் மாநிலத்தில் தடுப்பூசி ஓடப்படும் நடவடிக்கை 36.1 விழுக்காடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்குள் அம்மாநிலம் மிக விரைவில் நகரும் என நம்பிக்கை உள்ளதாக அதன் முதல்வர் டத்தோ ஶ்ரீ அஸ்லான் மான் கூறினார்.
மூன்றாம் கட்டத்திற்குள் நுழைய இன்னும் 3.9 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
முன்னதாக, தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திலிருந்து மூன்றாம் கட்டத்திற்குச் செல்ல அரசு சில விதிமுறைகளை முடிவு செய்தது.
1. 40% மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
2. தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை பாதுகாப்பான நிலையில் இருக்க வேண்டும்.
3. கோவிட்-19 அன்றாட நேர்வுகள் 2,000க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
பிரதமர் தான் ஶ்ரீ மகியாதின் முகம்மது யாசின் தலைமையேற்ற தேசியப் பாதுகாப்பு மன்ற சிறப்புக் கூட்டத்தில் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் மாநிலங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
மலேசியா முழுவதும் அனைத்து சில்லறாஇ வியாபாரத் துறைகளும் முழுமையாக இயங்க வேண்டும். ஆனால், வணிகத்தளத்தை நடத்துகிறவர்களும் வாடிக்கையாளர்களும் இரண்டு தடுப்பூசிகளைச் செலுத்தி இருக்க வேண்டும் என அக்கூட்டத்தில் தாம் பரிந்துரைத்ததாக அவர் சொன்னார்.
தற்போது தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பெர்லிசுடன் பேரா, பகாங், கிலாந்தான், திரங்கானு, பினாங்கு, சபா, சரவாக் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

