கோலாலம்பூர் | 20/7/2021 :-
காலித் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மீண்டும் புதிய தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைக்கப்படுவர் என காதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
தடுப்பூசி மையங்களில் காலித் தடுப்பூசி போடப்பட்ட விவகாரம் குறித்து கோவிட்-19 தடுப்பூசி செயற்குழு CITF தற்போது விசாரித்து வருகிறது.
கடந்த 17 ஆம் நாள் கெடா மாநிலத்தில் உள்ள இராணுவப்படை தடுப்பூசி மையத்தில் காலித் தடுப்பூசி தொடர்பான ஒரு புகார் இருப்பதாக கோவிட்-19 தடுப்பூசி செயற்குழு CITF தெரிவித்துள்ளது.
பாங்கி மாநாட்டு மையம் (BACC), மலேசிய அனைத்துலக கண்காட்சி – வாணிக மையம் (Mitec)ஆகிய இடங்களில் அதே போன்ற புகார்கள் குறித்து தொடர் விசாரணை முன்னெடுக்கப்படும் என CITF தெரிவித்தது.
தற்போது அவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருவதாகவும் இது குறித்து புதிய தகவல் இருந்தால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என CITF கூறியது.
எஸ்.ஓ.பி.யின்படி ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் முன்னர், அதனை தடுப்பூசி செலுத்தப்படுவருக்குக் காட்டப்பட வேண்டும் என CITF மேலும் கூறியது.

