Site icon அநேகன்

தடுப்பூசி மையத்தில் ரி.ம. 10க்கு விற்கப்பட்ட முகக்கவரி விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதா ?

பாங்கி | 20/7/2021 :-

பாங்கி மாநாட்டு மையத்தில் (BACC) இயங்கும் தடுப்பூசி மையத்தில் விற்கப்படும் முகக்கவரி வாங்கப்படுவது கட்டாயமாக்கப்பட மாட்டாது என கோவிட்-19 தடுப்பூசி செயற்குழு CITF தெரிவித்துள்ளது.

அங்கு விற்கப்பட்ட முகக்கவரி ஒன்று ரி.ம. 10.00 விலையில் விற்கப்பட்டது குறித்து டுவிட்டர் பக்கத்தில் @JasonT9380 என்ற கணக்கின் உரிமையாளர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

அவ்விவகாரம் நேற்றிரவு தீர்க்கப்பட்டு விட்டதால் அது குறித்து கூடுதலாக வேறு எதுவும் விளக்கம் தர வில்லை என CITF கூறியது.

இதனால், இதற்குப் பொறுப்பானவர்கள் கூடுதலான விலையைக் கொடுத்து முகக்கவரிவாங்கியுள்ள பொது மக்கள் தங்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்குமாறு டுவிட்டரில் கேட்டு வருகின்றனர்.

மேலும், “தீர்வு காணப்பட்டு விட்டது” என்பதற்கு CITF விளக்கம் தர வேண்டும் எனவும் வலுயுறுத்தப்பட்டு வருகிறது.

BACCயில் நடந்த விவகாரம் குறித்து CITFஇன் விளக்கம் அளிக்கப்படாததால் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் மீது நம்பிக்கை இழந்து வருவதாக டுவிட்டர்வாசிகள் கருத்துரைக்கின்றனர்.

அதே வேளையில்ப் காலித் தடுப்பூசி விவகாரமும் சமூக ஊடகங்களில் காணொலிகளால் பூதாகரமாக ஆகி உள்ள நிலையில், CITF தற்போது அவநம்பிக்கையைச் சம்பாதித்து வருகிறது.

மேலும், தடுப்பூசிக்கான நேர்முகச் சந்திப்புத் தேதியை விற்கும் விவகாரமும் தற்பொது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Exit mobile version