Site icon அநேகன்

ஜோகூரில் உள்ள தடுப்பூசி மையத்தில் பாலியல் தொந்தரவு ! – காவல் துறை விசாரணை

ஜோகூர் பாரு | 21/7/2021 :-

ஜோகூர் அனைத்துகல மாநாட்டு மையத்தில் இயங்கி வரும் ஆஸ்ட்ராஸெனாக்கா தடுப்பூசி மையத்தில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் அங்கு தடுப்பூசி போட வந்த மாதுவுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகாரளிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் காவல் துறையினர் அந்த மாதுவிடம் வாக்குமூலம் பெற்று விட்டதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி முகம்மட் பட்ஸ்லி முகம்மட் ஸையின் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த நாள் அன்று மாலை 4.56 மணி அளவில் 32 வயது கொண்ட அம்மாது காவல்துறையில் புகார் அளித்தார்.

இச்சம்பவத்தை குற்றவியல் பிரிவு 509 பிரிவின்படி விசாரிக்கப்படுவதாகவும் அதர்கு உதவியாக அம்மாதுவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

PPVAZ தடுப்பூசி மையத்திற்குத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த தமக்கு நடந்த விபரீதத்தைக் குறிப்பிட்டு காணொலி வாயிலாகப் பதிவு செய்து முகநூலில் அம்மாது பதிவேற்றம் செய்தார்.

Exit mobile version