கோலாலம்பூர் | 21/7/2021 :-
கிள்ளான் பள்ளாத்தாக்குப் பாகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளை உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளின் ஆற்றலையும் இடவசதிகளையும் அதிகரிக்க அவ்வாறு செய்யப்படுகிறது என தனியார் மருத்துவமனைகள் சங்கத் தலைவர் டாக்டர் குல்ஜிட்டுக்கு அரசு அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆணை நேற்று முதல் நடப்பில் வருவதாக அந்தக் கடிதம் கூறுகிறது.
தனியார் மருத்துவமனைகள் சங்கத் தலைவர் டாக்டர் குல்ஜிட்டுக்கு அரசு அனுப்பி வைத்த கடிதத்தில்…
அரசுப் பொது மருத்துவமனையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளை உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இந்த ஆணை இக்கடிதம் வெளியிடப்பட்டிள்ள 20/7/2021 ஆம் நாள் உடனடியாக நடப்புக்கு வருகிறது. ஒப்புதல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்”.
அவ்வாறு குறிப்பிட்டப்பட்டு சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் முகம்மட் ஷாஃபிக் அப்துல்லாவின் கையொப்பமிட்டு அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தின்படி, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பபடும் நோயாளிகளுக்கான செலவை ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அரசு ஏற்றுக் கொள்ளூம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கானச் சிகிச்சையை முழுமையாக வழங்கப்படுவது தனியார் மருத்துவமனையின் கடமையாகும்.
முடிவுசெய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி, சிகிச்சைக்கான செலவு கூடுதலானால், அதனை சுகாதார அமைச்சு மதிப்பீடு செய்த பின்னரே செலலுத்தும் என முகம்மட் சாஃபிக் தெரிவித்தார்.
அவ்வாறு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு விதிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்ட அரசு ஏற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்ட கட்டணம் :
கட்டில் : மிகக் குறைந்த கட்டணம் கொண்ட வார்டு
அறுவை சிகிச்சை உட்படுத்தியக் கட்டணம் : ரி.ம. 45,000
அறுவை சிகிச்சை உட்படுத்தாதக் கட்டணம் : ரி.ம. 25,000
தொடர் சிகிச்சைக் கட்டணம் : ரி.ம. 5,000
தனியார் மருத்துவமனைக்கு அனுப்பபட்ட நோயாளிக்கு சிகிச்சை முடிந்த பின்னர் மூன்று முறைக்கும் மேற்பட்ட தொடர் சிகிச்சை தேவை பட்டால், அதனை சுகாதார அமைச்சிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.
இது ராடியோதெராபி சிகிச்சையை உட்படுத்தியது கிடையாது.
ஒரு தன்னியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபப்ட்ட கோவிட்-19 அல்லாத நோயாளியை வேறு தனியார் மருத்துவமனைக்கு அமைச்சின் அனுமதி இல்லாமல் மாற்றம் செய்ய முடியாது.
அரசின் இந்தப் புதிய ஆணையை தனியார் மருத்துவமனை சங்கம் முழுமையாக ஏற்கிறதாக அதன் தலைவர் டாக்டர் குல்ஜித் சிங் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியானக் காலக் கட்டத்தில் அரசுக்கு உதவுவதில் தமது தரப்பு பெருமகிழ்ச்சி அடைவதாகவும் அதன் நடனடிக்கைகள் நேற்று இரவு முதல் சுமூகமாக நடந்து வருவதாகவும் டாக்டர் குல்ஜித் கூறினார்.
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கத்திற்கு அதிக இட வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மை நோக்கமாகும்.
கோவிட்-19 நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு தனியார் மருத்துவமனைகளில் நிரம்பிவிட்டன
முன்னதாக, கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு 100% ஐந்தாம் கட்ட கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பி விட்டதாக டாக்டர் குல்ஜித் தெரிவித்திருந்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளின் வசதிகள் மேம்படுத்தப்படும் என இம்மாதத் தொடக்கத்தில் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. ஆனால், தர்பொழுது அது அதிகமான கோவிட்-19 பரவல் பகுதியாக மாறியுள்ளது.
மற்ற மாநிலங்களில் இருந்து 6,500க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களைத் தருவிப்பது, தனியார் மருத்துவமனைகளுடன் ஒத்துழைப்பு, அதிகமான தனிமைப்படுத்தலை உருவாக்குதல், ஆபத்து குறாஇவான கோவிட்-19 சிகிச்சை மையங்களை உருவாக்குதல் ஆகியன அரசு அறிவித்த மேம்பாட்டு நடவடிக்கைகளாகும்.
மாபெரும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் (Greater Klang Valley) கோவிட்-19 பரவலைக் கையாள ஒரு சிறப்புப் பணிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. அப்பணிப்படை சுகாதார அமைச்சின் துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) டாக்டர் சோங் சீ கியோங் தலைமையேற்கிறார்.
அடுத்த மாதம் 1ஆம் தேதிக்குள் கில்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் தடுப்பூசிக்குப் பதிவு செய்துள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி பொட்டப்படும் நடவடிக்கைக்கு முன்னுருமை கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தத் தேதிக்குள் தடுப்பூசிக்கான தேதி கிடைக்காத ஆவனமற்ற வெளிநாட்டவர் உட்பட அனைவரும் தேர்வு செய்யப்பட்டத் தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசிக்கானத் தேதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

