Site icon அநேகன்

காலித் தடுப்பூசி : நாடு முழுவதும் 13 காவல்துறை புகார் !

கோலாலம்பூர் | 23/7/2021 :-

சில தடுப்பூசி மையங்களில் சுகாதார அமைச்சின் பணியாளர்கள் காலித் தடுப்பூசி செலுத்திய விவகாரம் குறித்து நாடு முழுவதும் 13 காவல் துறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலளித்த புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவுத் தலைவர் அப்துல் ஜலில் ஹசான், கோலாலம்பூரில் 7 புகார்களும், சிலாங்கூரில் 3 புகார்களுன், கெடா, பேரா. மலாக்கா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவ்வனைத்துப் புகார்களும் மாநிலக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் உள்ளன.

போலித் தடுப்பூசி விற்பனமை விவகாரம் குறித்தப் புகார்கள் வணிகம் தொடர்பானக் குற்றப் புலனாய்வுப் பிரிவின்கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இது வரையில் கோவிட்-19 தடுப்பூசியை அரசு மட்டுமே வழங்கி வருகிறது. எனவே, இவ்விவகாரம் குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

நேரடியாகவோ அல்லது இயங்கலை வாயிலாகவோ கோவிட்-19 தடுப்பூசி விறகப்படுவது அனுமதிக்கப்படவில்லை.

தடுப்பூசி போடப்படுவது உட்பட தகவல்களைப் பகிரும் முன்னர் அதன் உண்மைத் தன்மையைப் பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அப்துல் ஜலில் கூறினார்.

Exit mobile version