Site icon அநேகன்

மன நல குன்றியவரை பராமறிப்பு மைய வார்டன் கற்பழிப்பு !

ஈப்போ | 23/7/2021 :

இங்குள்ளத் தனியார் பராமறிப்பு மையத்தில் தங்கியிருந்த மன நலம் குன்றியவரை அதன் வார்டன் கற்பழித்தக் குற்றத்திற்காக ஈப்போ செஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த ஆண்டு அக்தோபர் மாதம் நடந்த இச்சம்பத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 43 வயது கொண்ட அகமாட் இராங் @ சுஹிரான் , நீதிபதி பிரிசில்லா ஹேமமாலினி முன்னர் அக்குற்றத்தை மறுத்துள்ளார்.

குற்றப்பத்திரிக்கையின்படி, அப்பராமறிப்பு மையத்தில் தங்கி வந்த 33 வயது பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிந்த பின்னர் அகுற்றத்தைப் புரிந்ததாகக் குறிப்பிடப்பட்டது.

கடந்த 28/10/2020 ஆம் நாள் காலை 8.20 மணி அளவில் ஈப்போ, தாமான் கிண்டிங் ராயா, ஜாலன் கிண்டிங் ராயா 10 எனும் முகவரியின் அமைந்துள்ள வீட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட அகமாட் இராங் @ சுஹிரான் அக்குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் பிரிவு 376 (2) இன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தது 10 பிரம்படிகளும் விதிக்கப்படும். மேலும், குற்ற நெறிமுறை சட்டம் பிரிவு 295 (1A) இன்படி, காவல்துறை கண்காணிப்பில் அதிகப்படியாக 3 ஆண்டுகள் இருக்கலாம்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் லியானா ஸவாணி முகம்மட் ராட்ஸியும் குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் கே. ஷாமினியும் வாதாடினர்.

குற்றஞ்சாட்டப்பட்ட அவ்வாடவரை நீதிபதி பிரிசில்லா ஹேமனாலினி ரி.ம. 5,000 பிணைப்பணம் செலுத்தியும் ஒருவர் உத்தரவாதத்தின் பேரிலும் விடுவித்தார். இவ்வழக்கு எதிர்வரும் 4/10/2021 ஆம் நாள் ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version