Site icon அநேகன்

தேசிய மீட்சி மன்றத்தில் இணைய எதிர்க்கட்சிக்கு அழைப்பு

KUALA LUMPUR, 11 Jun -- Menteri Kewangan Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz ketika ditemu bual selepas program Pelan Jana Semula Ekonomi Negara (PENJANA) bersama Bernama Tv di Wisma Bernama hari ini. --fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA

கோலாலம்பூர் | 24/7/2021

நாட்டின் அஅனைத்துத் தரப்பினரையும் இணைத்து தேசிய மீட்சித் திட்டத்தை செயல்படுத்த தேசிய மீட்சி மன்றத்தில் இணைய எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சரும் தேசிய மீட்சித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான தெங்கு ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணி, வாரிசான், பெஜுவாங் ஆகிய எதிர்க்கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் குறிப்பிட்டார்.

சபா மாநில அரசு, சரவாக் மாநில அரசு ஆகியவற்றுக்கும் இம்மன்றத்தில் இணைய ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை வல்லுநர்கள், தனியார் துறையினர், அரசு சாரா அமைப்புகள், பொருளாதாம், சமூகம், சுகாதாரம் ஆகிய துறை வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க தேசிய மீட்சி மன்றாம் அழைப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

பல்வேறு தரப்பினரின் அங்குத்துவமானது தேசிய மீட்சித் திட்டத்தைத் தற்காலச் சூழலுக்கு ஏற்றவாறு பலனளிக்கும் வகையில் செயல்படுத்த தேசிய மீட்சி மன்றத்திற்கு மேலும் வலுவைக் கொடுக்கும்.  

சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்துவது, தடுப்பூசித் திட்டத்தை விரைவுப் படுத்துதல், எஸ்.ஓ.பி.யை முறையாக நடைமுறைப்படுத்துதல், மீட்சிக் காலத்தில் அரசுக்கு ஆதரவும் உதவியும் வழங்குதல் ஆகிய பல்வேறு தரப்பினரின் ஈடுப்பாட்டால் சாத்தியமாகும் என தெங்கு ஸஃப்ருல் கூறினார்.

மேலும், மக்களுக்கு தேசிய மீட்சித் திட்டம் குறித்த அனைத்துத் தகவல்களையும் ஒளிவுமறைவு இன்றி பொது மக்களூக்கு நேர்மையாகவும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் தேசிய மீட்சி மன்றம் வழங்கும் என அவர் மேலும் சொன்னார்.

Exit mobile version