Site icon அநேகன்

ஒரு வீட்டுப் பணியாளருக்கு ஒரு வீட்டு வேலை : இந்தோனேசியாவுக்கு டத்தோ ஶ்ரீ சரவணன் பதில்

கோலாலம்பூர் | 25/7/2021 :-

ஒரு வீட்டுப் பணியாளருக்கு ஒரு வேலை மட்டுமே எனும் இந்தோனேசியாவின் பரிந்துரைக்கு மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் பதிலளித்துள்ளார்.

இந்தோனேசிய மனிதவள அமைச்சர் இடா ஃபவுசியாவுடனான இயங்கலை வழி சந்திப்பின்போது டத்தோ ஶ்ரீ சரவணன், மலேசியாவில் வீட்டு வேலைக்காகப் பணியமர்த்தம் செய்யப்படும் இந்தோனேசிய பணியாளர்களுக்கு தற்போது இருக்கின்ற அமைப்போடு ஒரு வீட்டின் அனைத்து வேலைகள் என அவர் பரிந்துரைத்தார்.

இவ்விவகாரம் தொட்டு கடந்த மே மாதத்தில் அவ்விரு அமைச்சர்களும் பேசியிருப்பதாகவும் அதன் தொடர்ச்சியாக நேற்று இயங்கலை வாயிலாக அவர்கள் சந்தித்துப் பேசியதாகவும் மலேசிய மனிதவள அமைச்சு தெரிவித்தது.

நேற்று நடந்த அந்த இயங்கலை சந்திப்பில் விஸ்மா ப்புத்ரா அதிகாரிகள், இந்தோனேசியாவின் மனிதவள அமைச்சு, வெளியுறவு அமைச்சு, வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் நிகராளிகளும் கலந்து கொண்டனர்.

இந்தோனேசியர்கள் பணியமர்த்தம் – பாதுகாப்பு ஆகியன குறித்து இரு நாடுகளும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவு செய்துள்ளதாக நேற்று அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் இந்தோனேசியர்கள் பணியாமர்த்தம் குறித்த விவகாரத்தில், ஒரு வீட்டுப் பணியாளாருக்கு ஒரு வேலை எனும் பரிந்துரையை பல முறை அந்நாடு முன்வைத்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை 2016 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. இப்போது சில மாற்றங்களுடன் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை கலந்தாய்வில் உள்ளது.

மாற்றங்கள் செய்யப்பட வேண்டியவைகள் அப்போது தொட்டே நிலுவையில் உள்ளன.

கடந்த 2013இல், கோலாலம்பூரில் இருக்கும் இந்தோனேசியத் தூதர் அகுஸ் திரியாந்தோ, அந்நாட்டின் ஐந்தாண்டுத் திட்டத்தின்படி, வீட்டுப் பணியாளர்களாகவும் இதர சாதாரன வேலைகளுக்காகவும் இந்தோனேசியர்களை அனுப்பாது என முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.

மாறாக, அப்போதையக் கால குறைந்த ஊதியமான ரி.ம. 900 அடிப்படையில், தேர்ச்சி பெற்ற இந்தோனேசிய சமையல்காரர், பாதுகாவலர், குழந்தை பராமறிப்பாளர் அல்லது வீட்டுப் பணியாளரை பணியமர்த்த முதலாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்தப் ப்பரிந்துரை மலேசிய முதலாளிகளால் கடும் எதிர்ப்புக்குள்ளானது. அதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாகவும், அவ்வாறான இந்தோனேசியப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது அதிகச் செலவுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இம்முறை நடத்தப்பட்டக் கலந்தாலோசனையில், இந்தோனேசியர்களை வீட்டுப் பணியாளர்களாக நியமிக்கப்படுவது குறித்த பணியமர்த்தம், ஊதியம், பாதுகாப்பு ஆகியன உட்படுத்திய அனைத்து விவகாரங்களில் ஒரே வழிமுறையை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது.

ஊதியம், சுகாதாரப் பரிசோதனை ஆகியவற்றை உட்படுத்திய அனைத்து விவகாரங்களிலும் இந்தோனேசியர்களை மலேசியாவில் பணியமர்த்தம் செய்வது குறித்து சீரான ஒரே வழிமுறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும். தற்போதைய வழிமுறைகளைச் சீர் படுத்தி ஒரே முறையைக் கையாள இரு நாடுகளும் கொள்கை அடிஉப்படையில் ஒத்துழைக்க இருக்கின்றன

Exit mobile version