Site icon அநேகன்

சிலாங்கூரில் கையூட்டு : கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ! – அமிருடின் ஷாரி

KUALA LUMPUR, 10 JULAI 2021 - Menteri Besar Selangor, Datuk Seri Amirudin Shari berucap pada sidang akhbar Program Outreach Vaksinasi PKPD Pangsapuri Asrama Seri Ayu yang dikenakan Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) semasa Pelan Pemulihan Negara (PPN) Fasa 1 di negeri Selangor di sini hari ini. GAMBAR - AMIR KHALID / PEMBERITA - HUDA ( KOSMO )

ஷா ஆலாம் | 25/7/2021 :-

கையூட்டு தொடர்பாக பல பொதுச் சேவை அதிகாரிகள் ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தில் அது குறித்தக் குற்றங்களைப் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் தனது தரப்பு பல துறைகளையும் இலாகாக்களையும் மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அதிகாரத்தைத் தவறான முறாஇயில் பயன்படுத்தி குற்றம் புரிந்தோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க சற்றும் தயங்காது எனவு டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் ஒருவர் குற்றம் புரிந்துள்ளார் என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத வரையில், அவர் குற்றமற்றவரே எனவும் விசாரணை சட்டப்படி நேர்மையாக நடத்தபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று, புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஊழல் வழக்கில் மாவட்ட அதிகாரியும் அளவியல் அதிகாரியும் குற்றஞ்சாட்டப்பட்டு 5 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version