கோலாலம்பூர் | 25/7/2021 :-
நாளை நடக்கவிருக்கும் நாடாளுமன்ற சிறாப்பு அமர்வு காலை 10..0 மணி தொடங்கி மாலை 5.30 வரையில் நடைபெறும் என மக்களவைத் தலைவர் டத்தோ அஸார் அஸிஸான் ஹாருன் தெரிவித்தார்.
பிற்பகல் 1.00 மணிக்கு ஓய்வு நேரம் வழங்கப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் தொடரப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாரேனும் விவாதித்து முடிக்கவில்லை என்றால் கூடுதலாக ப்ரு மணி நேரம் நீட்டிக்கப்படுவது சாத்தியமில்லை எனவும் அவர் சொன்னார்.
இந்த சிறப்பு அமர்வின் நேரக்கட்டுப்பாடு தமது அதிகாரத்தின் கீழ் இருப்பதாகவும் முடிவு செய்தபடி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும் பின்னர் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் கூட்டம் நடைபெறும் எனக் குறிப்பிட்ட அஸார், விவதிக்கப்படுவோர் பட்டியல் அதிகமாக இருந்தால் மட்டுமே கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என்றார்.
நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் போக்கை வைத்தே அது முடிவு செய்யப்படும் என அஸார் கூறினார்.

