Site icon அநேகன்

தோக்கியோ ஒலிம்பிக் 2020 – பூப்பந்து ஆண்கள் ஒற்றையர் பிரிவு : அரை மணி நேரத்திற்குள் அடுத்தச் சுற்று உறுதியானது !

தோக்கியோ | 25/7/2021 :-

பூப்பந்து ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறாங்கிய மலேசியாவின் லீ ஸீ ஜியாக்கு அருமையானத் தொடக்கமாக இன்று மாலை நடந்த ஆட்டம் அமைந்தது.

M பிரிவு குழுக்களுக்கான ஆட்டத்தில் யூக்ரேனின் Artem Pochtarov வை 25 நிமிடங்களில் 21-5, 21-11 எனும் நேரடி செட்களில் வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்குத் தயாராகிறார் லீ ஸீ ஜியா.

லீ ஸீ ஜியாவை எதிர்த்து களமிறங்கிய யூக்ரேனின் Artem Pochtarov ஸீ ஜியாவுக்கு இணையான ஆட்டக்காரர் இல்லை என்றாலும் முதல் செட்டில் 9 நிமிடங்களில் தோல்வியுற்ற Artem Pochtarov இரண்டாம் செட்டில் கடுமையானப் போட்டியை வழங்க முயற்சித்தார்.

இருந்தும் மலேசியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் முக்கியமானவராகக் கருதப்படும் லீ ஸீ ஜியா வெற்றிகரமாக அடுத்தச் சுற்றுக்குத் தகுதியானார்.

அடுத்தச் சுற்றில் அவர் பிரான்சின் Brice Leverdez எதிர்வரும் புதன்கிழமை சந்திக்கவுள்ளார்.

Exit mobile version