Site icon அநேகன்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு : தேசிய மீட்சித்திட்டம் குறித்து பிரதமர் விளக்கம்

கோலாலம்பூர் | 26/7/2021 :-

பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் இன்று நடந்த நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் தேசிய மீட்சித் திட்டம் (PPN) குறித்துத் தமது விளக்கத்தை வழங்கினார்.


காலை 10.00 மணிக்குத் தொடங்கிய அக்கூட்டத்தில், கோவிட்-19 பெருந்தொற்று கையாளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ அடாம் பாபா விளக்கமளிக்க இருப்பதாக நாடாளுமன்றத்தி அதிகாரப்பூர்வ இணையத்தளம் குறிப்பிட்டிருந்தது.

தடுப்பூசி திட்டம் குறித்து அஈரியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சரும் தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் விளக்கமளிப்பார் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இதனிடயே, பொருளாதார உதவித் திட்டங்கள் குறித்து

நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிசும், நிறைவாக

ஊரடங்கு குறித்து துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மஆயில் சப்ரி யாக்கோப்பும் விளக்கமளிக்க உள்ளனர்.

அந்த அமரவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியை எழுப்புவதற்கும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் வாய்ப்பளிக்கப்படும்.

தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் போடப்படாவிட்டாலும் இந்த சிறப்பு அமர்வில் அனைத்து 220 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் மன்றத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

கோவிட்-19 பரிசோதனை உட்பட அனைத்து எஸ்.ஓ.பி.களும் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. அனைத்து உறுப்பினர்களும் முகக்கவரி அணிந்திருந்தனர்.

Exit mobile version