Site icon அநேகன்

மலாக்காவில் மூத்த குடிமக்களும் பேறு குறைந்தவர்களும் நேரடியாகத் தடுப்பூசி மையங்களுக்கு ‘walk in’ முறையில் செல்லலாம் !

மலாக்கா | 26/7/2021 :-

தடுபபூசி செலுத்திக் கொள்ள நேர்முகச் சந்திப்புக்க்கான தேதி கிடைக்காத மூத்த குடிமக்களும் பேறு குறைந்தவர்களும் நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு ‘walk in’ முறையில் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள மலாக்கா கோவிட்-19 நோய்த்தடுப்புப் பணிக்குழு (CITF) அனுமதியளித்துள்ளது. இந்த அனுமதி இன்று முதல் தொடங்குகிறது.

மலாக்கா மாநில சுகாதாரம், போதைப்பொருள் தடுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மரிமான் இது குறித்து தெரிவிக்கையில், தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் மலாக்காவில் உள்ள அனைத்துத் தடுப்பூசி மையங்களிலும் நாள் ஒன்றுக்கு முதலில் வரும் 50 மூத்த குடிமக்களுக்கும் பேறு குறைந்தவர்களுக்கும் இந்த முறைப்படி தடுப்பூசி போடப்படும் என்றார்.

‘walk in’ முறையில் வருகிற மூத்த குடிமக்களுக்கும் பேறு குறைந்தவர்களுக்கும் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையில் தடுப்பூசி போடப்படும். அவ்வாறு தடுப்பூசி மையங்களுக்கு வரும் மூத்த குடிமக்கள் அல்லது பேறு குறைந்தவர்கள் தங்களின் அடையாள அட்டை, மைசெஜாத்தெரா பதிவுறக்கம் செய்யப்பட்ட விவேகக் கைப்பேசி, ஆகியவற்றுடன் ஆபத்தான தொடர்நோய் இருந்தால் அது தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘walk in’ முறை முன்னெடுப்பால் மலாக்கா மாநிலத்தில் உள்ள 100% மூத்த குடிமக்களுக்கும் பேறு குறைந்தவர்களுக்கும் மிக விரைவில் தடுப்பூசி போடப்பட்டு விடும் என அவர் கூறினார்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள நேர்முகச் சந்திப்புக்கானத் தேதி கிடைக்கப்பெற்ற மூத்த குடிமக்களும் பேறு குறைந்தவர்களும் முடிவு செய்யப்பட்ட அந்த தேதியின்படியே வர வேண்டும் எனவும் அவர்கள் ‘walk in’ முறையில் தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம் எனவும் டத்தோ ரஹ்மாட் மரிமான் வலியுறுத்தினார்.

Exit mobile version