கோலாலம்பூர் | 26/7/2021 :-
இவ்வாண்டு அறிவிக்கப்பட்ட அனைத்து ஊரடங்கு சட்டங்களும் கடனந்த 21/7/2021 முதல் காலாவதியாகின என பிரதமர் துறை அமைச்சர் (சட்டம்) தக்கியூடின் ஹசான் தெரிவித்தார்.
“ஆம், செல்லுபடியாகாது” என பாஸ் கட்சியின் கோத்தாபாரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தக்கியூடின் இன்றூ நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் போது நம்பிக்கைக் கூட்டணியின் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கிடம் தெரிவித்தார்.
ஊரடங்கு தொடர்பான சட்டங்கள் யாவும் காலாவதியாகின என மாமன்னர் ஒப்புக் கொண்டாரா என லிம் குவான் எங் விளக்கம் கோரினார்.
ஊரடங்கின் போது அதற்கானச் சட்டங்களை மாமன்னர் அறிவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லலை.
கடந்த 21/7/2021 தொடங்கி விதிக்கப்பட்ட அனைத்து தண்டங்களும் முறையானதா என லிம் வினவினார். ஏன் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை எனவும் லிம் கேள்வி எழுப்பினார்.
இன்று பிற்பகல் 1.00 மணி வரையில், அச்சட்டங்கள் காலாவதியாகின என தேசிய வழக்கறிஞர் இலாகாவின் இணையப்பக்கத்தில் எந்தத் தகவலும் இல்லை.

