Site icon அநேகன்

பிரதமரிடம் கேள்வி கேட்டால் நிதியமைச்சர் பதிலளிப்பதா ? – எதிர்க்கட்சியினர் காட்டம் !

கோலாலம்பூர் | 26/7/2021 :-

இன்றைய நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் பிரதமர் மகியாதீன் தேசிய மீட்சித் திட்ட குறித்த இறுதி உரை ஆற்ற மாட்டார். மாறாக, அதனை நிதியமைச்சரும் தேசிய மீட்சித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான டத்தோ ஶ்ரீ தெங்கு ஸ்ஃப்ருல் அப்துல் அஸிஸ் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த இறுதி உரையைப் பிரதமர் மகியாதீன் தான் ஆற்ற வேண்டும் என பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து கடும் கோபமுற்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், அவ்வாறு நடப்பதற்கு அவைத் தலைவர் அஸார் ஹாருனிடம் வலியுறுத்தினார்.

விடுதலை காலம் தொட்டே நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதிலிருந்து பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நிதியமைச்சர் பதிலளிக்கும் வழக்கம் இருந்ததில்லை என அன்வார் இப்ராகிம் கூறினார்.

Exit mobile version