Site icon அநேகன்

நாடாளுமன்றத்தில் கோவிட்-19 பரிசோதனை : மேலும் 9 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது !

கோலால்மபூர் | 30/7/2021 :-

நேற்று நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட இடைவேளை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் மேலும் 9 பேருக்கு அத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது அதிகாரிகள், நாடாளுமன்ற அதிகாரிகள் உட்பட 1,183 பேருக்கு நடத்தப்பட்ட அப்பரிசோதனை நடவடிக்கை இராவு 8.30 மணி அளவில் முடிந்தது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ட்ரி டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அனைவருக்கும் TK Antigen (RTK-Ag) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மொத்தமாக 10 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் சொன்னார்.

அவற்றில் இருவருக்கு சொற்ப அறிகுறிகாளும் மற்ற 8 பேருக்கு அறிகுறிகள் தென்படவும் இல்லை.

நண்பகலில் ஒருவர் இலேசாக இரும்மல் ஏற்ப்பட்டபோது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

Exit mobile version