Site icon அநேகன்

அசல் தமிழ் தனிப்பாடல் மற்றும் தனிப்பாடல்கள் தொகுப்புகளை மின்னியல் வாயிலாகச் சமர்ப்பிக்கும் வாய்ப்பை ராகா அறிமுகப்படுத்தியுள்ளது !

மலேசியர்கள் தாங்கள் தயாரித்தப் பாடல்களை மின்னியல் முறையில் ராகாவின் அகப்பக்கத்தில் சமர்ப்பிப்பதோடு வானொலியில் ஒலிபரப்பப்படும் வாய்ப்பையும் பெறலாம்.

‘தனிப்பாடல் மற்றும் தனிப்பாடல்கள் தொகுப்பு சமர்ப்பிப்பு’ பற்றிய விபரங்கள்
• உள்ளூர் இசைக் கலைஞர்களை ஆதரிக்கும் வண்ணம், அனைத்து மலேசியர்களும் தற்பொழுது ராகாவின் அகப்பக்கம் வழியாக தாங்கள் தயாரித்த அசலானத் தனிப்பாடல் மற்றும் தனிப்பாடல்கள் தொகுப்புகளை மின்னியல் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம் என ராகா அறிவித்துள்ளது.
• பாடல்களைச் சமர்ப்பிக்கக் கீழ்க்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
o raaga.my-ஐ வலம் வாருங்கள்.
o கலைஞர் மற்றும் பாடல் விவரங்களைப் பதிவுச் செய்யக.
o அசல் பாடலைக் குறிப்பிடப்பட்ட வடிவத்தில் பதிவேற்றம் செய்யக. .
• தேர்ந்தெடுக்கப்பட்டப் பாடல்கள் ராகாவில் ஒளிபரப்பப்படும்.
‘தனிப்பாடல் மற்றும் தனிப்பாடல்கள் தொகுப்பு சமர்ப்பிப்பு’-ஐ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக.

Exit mobile version