Site icon அநேகன்

15வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொகுதி எல்லைகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் ! – பெர்சே

கோலாலம்பூர் | 12/8/2021 :-

15வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொகுதி எல்லைகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு மறுத்தால், சீர்திருத்த சிந்தனை கொண்ட மாநில அரசு, சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அது கூறியது.

நியாயமான நிகராளித்துவத்தின் வாய்ப்புகள் குறித்த அறிக்கையைத் இன்று பினாங்கில் தொடக்கி வைத்த பின்னர்,பெர்சே இந்த அழைப்பை விடுத்தது.

பினாங்கு மாநிலச் சட்டசபை எல்லை நிர்ணயப் பிரச்சனைகளையும், முறைகேடுகள் (malapportionment) மற்றும் ஜெர்ரிமாண்டரிங் (gerrymandering) (அரசியல் நோக்கங்களுக்காக, சில தரப்பினருக்கு நன்மை அளிக்கும் வகையில் தொகுதி எல்லைகளைப் பிரிப்பது) செயல்படுத்துவதன் விளைவால் ஏற்படும் பிரச்சனையைக் குறைக்க எல்லை நிர்ணய உருவகப்படுத்தல் வழி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வு சிலாங்கூரிலும் நெகிரி செம்பிலானிலும் நடத்தப்பட்டது. ஆனால், அதன் தரவுகள் இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்படும் போதும், தானியங்கி வாக்காளர் பதிவு நடப்புக்கு வருவதாலும் சமநிலையற்றப் பிரச்சனைகள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்று பெர்சே கூறியது.

கல்வி – வேலை நோக்கங்களுக்காகப் பெரும்பாலான இளையோர்கள் நகர்ப்புறங்களில் தற்போது வாழ்கிறார்கள்.

இதனால், புறநகர் பகுதிகளைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் வாழ்கிறவர்களின் எண்ணிக்கை மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்படும் போதும், தானியங்கி வாக்காளர் பதிவு நடப்புக்கு வருவதாலும் இந்த இடைவெளி ஆறு முதல் எட்டு மடங்கு வரை அதிகரிக்கலாம் என பெர்சே கூறியது..

Exit mobile version