Site icon அநேகன்

பிரதமர் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு அடுத்த மாதம் 7 ஆம் தேதி நடைபெறும் !

PUTRAJAYA, 23 April -- Menteri Komunikasi dan Multimedia Datuk Saifuddin Abdullah berharap rakyat Malaysia meningkatkan minat membaca bagi menggalakan perkembangan ilmu dalam masyarakat. Beliau berkata ketika ini purata membaca rakyat Malaysia adalah kira-kira tiga jam seminggu berbanding sesetengah negara maju yang rakyatnya membaca sekitar 10 jam seminggu. - -fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA

கோலாலம்பூர் | 12/8/2021 :-

பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு அடுத்த மாதம் 7 ஆம் தேதி நடத்தப்படும் என தொடர்பு – பல்லூடக அமைச்சை சைஃபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

அது நாடாளுமன்ற நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இது தொடர்பான அறிவிப்பு அறிக்கை மக்களவைத் தலைவரால் வெளியிடப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கவிருக்கும் முழு நாடாளுமன்ற அமர்வை மாமன்னர் தொடக்கி வைப்பார்.

இருந்தாலும் மறுநாள் நடத்தப்பட இருக்கும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு பலரின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும், அத்தேதிக்கு முன்னதாகவே நாடாளுமன்றம் கூட்டப்படலாம் எனவும் அரண்மனைத் தரப்பு ஆருடங்கள் கூறுகின்றன.

 நாடாளுமன்ற அமர்வு மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் என அரண்மனை தரப்பு கூறியது தொடட்பில் அமைச்சர் சைஃபுடினிடம் வினவியபோது அவர் அதற்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இந்திரா மாக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சில அதிகாரப்பூர்வ இரகசியங்களைக் காக்கும் கடப்பாட்டில் இருப்பதால் அக்கேள்விக்குப் பதிலளிக்க மறுத்து விட்டார்.

நாடாளுமன்ற அமர்வு விரைவுப்படுத்தப்படுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டதா என அவரிடம் வினவியபோது, அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் எனப் பதிலளித்தார்.

 பிரதமர் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புப் பரிந்துரையை மகியாதீனோ அல்லது துணஐப் பிரதமர் இஸ்மாநில சப்ரி யாக்கோப்போ அல்லது இதர அமைச்சர்களில் ஒருவரோ கொண்டு வரலாம் என சைஃபுடின் தெரிவித்தார்.

மேலும், அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கும் முறை குறித்தும் அதற்கு முன்னர் பிரதமர் உரை குறித்தும் அமைச்சரவை கலந்தாலோசித்து ரவருவதாகவும் அவர் சொன்னார்.

Exit mobile version