கோலாலம்பூர் | 12/8/2021 :-
எதிர்வரும் செப். 1 ஆம் நாள் பள்ளிக் கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் அம்முடிவை எடுத்த அரசாங்கம் கவனமில்லாமலும் பொறுப்பற்றத் தனமாகவும் நடந்து கொள்வதாகவும் சித்தரிக்கப்படும் எஅ அம்னோவின் துணைத் தலைவர் முகம்மட் ஹசான் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு முழுமையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் முழுமையடையாததால். கல்வி அமைச்சு முடிவு செய்தது போல் பள்ளிக் கூடங்களைத் திறக்க இன்னும் சரியான காலம் அமையவில்லை என அவர் கூறினார்.
இன்னும் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படும் நடவடிககியை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
ஒரு வேளை கல்வி அமைச்சு முடிவு செய்தது போல முழுமையாகப் பள்ளிகள் திறக்கப்படுமேயானால், நாட்டின் சுகாதார நிலை இன்னும் மோசமாகி விடும்.
எனவே, மாணவர்கள், ஆசிரியர்கல் மட்டும் அல்லாது அவர்களின் குடும்பங்கள், சமுதாயத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்ப்படுத்தும் இந்த முடிவை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் செப். 1 ஆம் தேதி பள்ளிக் கூடங்கள் திறாக்கபப்ட்டு வகுப்பறாஇயில் நேரடி கற்றல் கற்பித்தல் தொடரப்படும் என கடந்த ஜூன் மாதத்தில் கல்வி அமைச்சர் அறிவித்தார். இருந்தாலும் அப்போதைய கோவுட்-19 நிலவரத்தைப் பொறுத்து அது முடிவெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.
இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் தற்போது அன்றாட கோவிட்-19 நேர்வுகள் 20,000ஐத் தாண்டியுள்ளது.இது பலரின் கவலைக்குக் காரணமாக மாறியுள்ளது.
இதனிடயே, எதிர்வரும் செப். 1 ஆம் நாள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்பதனைக் குறிப்பிட்டு எந்த அறிவிப்பும் கல்வி அமைச்சௌ இதுவரையில் வெளியிட வில்லை.

