Site icon அநேகன்

இராம்கர்ப்பால் : காவல்துறை சனிசியை விசாரிக்குமா ?

புக்கிட் கெலுகோர் | 13/8/2021 :-

கோவிட்-19 கொள்கலன் பிணவறை குறித்தப் பகடி பேச்சு தொடர்பில் கெடா மாநில முதல்வர் முகம்மட் சனுசி முகம்மட் நோரை காவல்துறை விசாரணை செய்யுமா என புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் இராம் கர்ப்பால் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக சமூக ஊடகத்தில் முகம்மட் சனுசியை விமர்சித்தவர்களை காவல்துறை உடனடியாக விசாரணை செய்ததைத் தொடர்ந்து இவ்வாறு இராம்கர்ப்பால் சிங் வினவினார்.

இவ்விவகாரத்தில் முகம்மட் சனுசியை விசாரிக்காமல் அவரின் பகடிப் பேச்சால் தூண்டப்பட்டு விமர்சித்தவர்களைக் காவல்துறை உடனடியாக விசாரித்துல்ளது ஆச்சரியத்தை எழுப்பியுள்ளது.

நகைச்சுவைக்காகப் பேசியதாக இருந்தாலும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் இருப்பதை மறந்திருக்கக் கூடாது எனவும் அவர் கூறுவது மக்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கப்படும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என ஜ.செ.க. கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் இராம்கர்ப்பால் கூறினார்.

சனுசியின் அவ்வாறானப் பேச்சு குற்றவியல் தடுப்புப் பிரிவு 504 இன் படி விசாரிக்கப்பட முடியும். அத்தகையத் தவறை அவர் செய்திருப்பது குறித்து உறூதி செய்ய சனுசி விசாரிக்கப்பட வேண்டும் என இராம் கர்ப்பால் சொன்னார்.

முன்னதாக முகம்மட் சனுசியை விமர்சித்ததற்காக சிரம்பானில் இருக்கும் வயது முதிர்ந்த ஒருவரை அருகில் உள்ள மஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் விசாரணாஇ அனுமதி வாங்கி அவரது வீட்டிற்கே சென்று விசாரணைக்காகத் தடுத்து வைத்தது போல் காவல் துறை முகம்மட் சனுசியைத் தடுத்து வைத்து விசாரணை செய்யுமா ?

 சனுசி சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல எனவும் அவரின் மீது பயம் கொள்ளாமல் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இராம் கர்ப்பால் வலியுறுத்தினார்.

Exit mobile version