கோலாலம்பூர் | 13/8/2021 :-
நம்பிக்கைக் கூட்டணியின் இளைஞரணித் தலைவர் பதவியை அம்னோவின் இளைஞரணித் தலைவரான அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கிக்கு வழங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் உண்மையில்லை என நம்பிக்கைக் கூட்டணி தெரிவித்துள்ளது.
பிகேஆர் கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் இது குறித்து விளக்கம் அளிக்கும்போது, நேற்று இரவு தொடங்கி சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கும் அத்தகவல் பொய்யானது என இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பொய்யான அக்கூற்றின்படி, இடங்கலையில் நடந்த நம்பிக்கைக் கூட்டணியின் மாதாந்திரக் கூட்டத்தில் அம்னோவின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி கலந்து கொண்டதாகவும், எதிர்க்கட்சிகளுடன் அம்னோ இணைவது குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அம்னோவின் இளைஞரணித் தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கிக்கு நம்பிக்கைக் கூட்டணியின் இளைஞர் பிரிவு தலைவராக ஸாஹிட் நியமிக்கக் கேட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டது.
கடந்த 6 ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஷாஸ்னி முனிர் இத்னின் கோவிட்-19 தொற்றால் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்தப் பதவி காலியாக உள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாதம் அன்வார் அம்னோ தலைவர்களைச் சந்தித்ததில் இருந்து அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி இணைப்பு சாத்தியங்கல் குறித்து வதந்திகளும் தகவல்களும் பரவி வருகின்றன.
தற்போது, அவ்விரண்டு தரப்பினரும் பிரதமர் மகியாதீனைப் பதவி விலக வலியுறுத்து வருகின்றனர்.

