Site icon அநேகன்

அனைத்துக் காவல் துறை அதிகாரிகளின் விடுமுறைகளை புக்கிட் அமான் முடக்கியது !

கோலாலம்பூர் | 13/8/2021 :-

அடுத்த அறிவிப்பு வரும் வரையில் அனைத்துக் காவல் துறையினரின் விடுமுறைகளையும் புக்கிட் அமான் முடக்கியுள்ளது.

‘Op Aman’ திட்டத்திற்காக அவ்வாணையை புக்கிட் அமான் நிர்வாகப் பிரிவுன் தலைவர் ஸைனி ஜாஸ் வெளியிட்டதாகவும் அது உடனடியாக நடப்புக்கு வருவதாக அறியப்படுகிறது.

எதிர்வரும் 21/8/2021 ஆம் நாள் நடக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டப் பேரணிக்கான அனைத்துக் காவல் துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டி அவ்வாணை வெளியிடப்பட்டதாக இது குறித்தத் தகவல் அறிந்த நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது என மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், அவ்வாணைக்கும் பேரணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இவ்விவகாரம் குறித்து ஸானி விளக்கமளித்தார்.

காவல் துறையில் இது போன்று கட்டளையிடுவது அவ்வப்போது நடக்கும் வழக்கமாகும் என ஸனி கூறினார்.

மேலும், பொதுத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட இருப்பதால் அது போன்ற கட்டளை வெளியிடப்பட்டது எனக் கூறப்படுவதையும் ஸைனி மறுத்துள்ளார்.

Exit mobile version