கோலாலம்பூர் | 13/8/2021 :-
அடுத்த மாதம் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள பிரதமர் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை அங்கீகரிக்க இதரக் கட்சிகளுடன் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் தெரிவித்தார்.
இது குறித்து ஒரு மனதான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதன் வழி தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து செயல்படவும் கோவிட்-19 பெருந்தொற்ரை நிர்வகிக்கவும் உகந்த நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தவும் வழி செய்யும் என பிரதமர் தெரிவித்தார்.

