Site icon அநேகன்

யாருமே பெரும்பான்மையை நிரூபிக்காததால் நான் பதவி விலக வில்லை ! – பிரதமர் (விரிவான செய்தி)

கோலாலம்பூர் | 13/8/2021 :-

புதியப் பிரதமராக யாரும் இன்னும் தங்களுக்கானப் பெரும்பான்மையை உறுதிப்படுத்தாததால் தாம் பதவி விலக வில்லை எனப் பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் கூறியுள்ளார்.

இதனால், அரசியலமைப்புச் சட்டத்தின் படி புதிய பிரதமரை நியமிக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையையும் புதிய அரசாங்கத்தையும் அமைக்க முடியாது எனப் பிரதமர் இன்று நேரலையில் பேசிய போது தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிகவரத்தில் தமது ஆட்சியின் மீதும் தேசியக் கூட்டணி அரசாஙக்த்தின் மீதும் நம்பிக்கையில்லா விமர்சனம் எழுந்துள்ளதைக் கண்டு தாம் மிகுந்த வருத்தமடைவதாகக் கூறினார்.

தாம் பதவியில் அமரும் போது கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியது. அஃது ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது, அதனைக் கையாள அமைச்சரவையினர் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவைத் தாம் எதிர்ப்பார்த்ததாகக் குறிப்பிட்டார்.

ஆனால், சிலர் தற்போது ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளனர்.

இதனால், தமது பதவி குறித்த அங்கீகாரத்தின் மேல் கேள்வி எழுந்தது எனக் கூறியப் பிரதமர், கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி தமக்கு இரண்டு வழிகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்.

முதலாவது, மாமன்னரிடம் அரசாங்கத்தைக் கலைக்கக் கோரி பொதுத் தேர்தல் நடத்துவட்து’ இரண்டாவது தாம்ம் பதவி விலகுவது எனக் கூறினார்,

தமக்கு மிகவும் எளிதான முடிவு பதவி விலகுவதுதான். அதன் பிறகு பெரும்பான்மை ஆதரவு கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாமன்னரால் பிரதமராக நியமிக்கப்படுவார்.

தாம் அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பதாகவும் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியை நன்முறையில் முடிவுக்குக் கொண்டுவர வழி காண்பதாகவும் தெரிவித்த பிரதமர், இது வரையில் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய பிரதமராவதற்குத் தமக்குப் பெரும்பான்மை இருப்பதை உறுதிப்படுத்த வில்லை எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் தற்போது பதவி விலகினால், கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலக வேண்டி வரும் எனவும், இதனால் தேசியக் கூட்டணி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதாகி விடும்.

அடுத்து வரும் இரு மாதங்கல் மிக மிக முக்கியமானவை. அரசாஙக்த்தின் திட்டமிடலின் படி அனைத்து நடவடிக்கைகளும் முறையாக நிறைவேறினால், அக்தோபர் மாதத்தில் சமூக நிலையில் நோய்த்தடுப்பை அடைந்து விட முடியும் என்றார்.

ஒரு வேளை இந்த அரசியல் நெருக்கடியால் அவை தடைப்பட்டு முறையான அரசாங்கம் அமைக்கப்படவில்லை என்றால், சமூக நிலையிலான நோய்த்தடுப்பு இலக்கை அடைய முடியாமல் போய்விடும் எனவும் அதனால் பல உயிர்கள் ஆபத்து நிலைக்குத் தள்ளபடும் எனவும் அவர் சொன்னார்.

Exit mobile version