Site icon அநேகன்

சிலாங்கூர் தே. மு. : அன்வார் வேண்டாம் , டிஏபி வேண்டாம் எனும் அம்னோவின் உறுதிமொழி என்னவானது ?

ஷா ஆலாம் | 14/8/2021 :-

அம்னோவின் முந்தைய முடிவான “வேண்டாம் அன்வார் ! வேண்டாம் டிஏபி !” தற்போது என்னவானது என சிலாங்கூர் மாநில தேசிய முன்னணியின் தகவல் பிரிவுத் தலைவர் இஷாம் ஜலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று பிரதமர் ஆற்றிய உரைக்குப் பிறகு அம்னோவில் இருக்கும் தேசியக் கூட்டணி ஆதரவாளர்கள் எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இபுராகிமுடனும் ஜ.செ.க.வுடனும் ஒத்துழைக்க இருப்பதைச் சுட்டிக் காட்டி இஷாம் ஜலில் அவ்வாறு வினவினார்.

தற்பொழுது யார் பிகேஆர் உடனும் ஜ.செ.க.வுடனும் புதியக் கூட்டணிக்குத் தயாராக உள்ளனர் ?

இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட “வேண்டாம் அன்வார் ! வேண்டாம் டிஏபி !” என்னவானது ? எனும் கேள்வியை முன்வைத்துள்ளார்.

ஒரு நிரந்தரப் பதவியை வழங்கினார் எதும் முடியும்ம் எனும் நிலையில் உள்ளனர் எனத் தமது முகநூல் பக்கத்தில் பதிவுட்ட இஷாம் ஜலில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிமின் கூற்றான “அன்வார் இபுராகிமுடனும் ஜ.செ.க.வுடனும் அம்னோ ஒத்துழைத்தால் மிகப் பெரிய அவமானம்” என்பதையும் பகிர்ந்திருந்தார்.

மனோவில் இருந்து கொண்டு தேசியக் கூட்டணிக்கும் பிரதமர் மகியாதினுக்கும் ஷாஹிடான் காசிம் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version