Site icon அநேகன்

பிரதமர் மீது காவல்துறையில் அமானா புகார் ; பிகேஆர் ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் !

கோலாலம்பூர் 14/8/2021 :-

நேற்று பிரதமர் ஆற்றிய உரையானது கையுட்டு – ஊழல் தொடர்புடையதாகக் கூறி காவல்துறையில் அமானா கட்சி புகார் அளித்துள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணி தொடங்கி அமானா கட்சியினர் நாட்டின் பல காவல் நிலையங்களில் இது குறித்தப் புகாரை அளித்திருப்பதாக அக்கட்சியின் முகம்மட் சானி ஹம்ஸான் தெரிவித்தார்.

இதனிடயே, அதே விவகாரத்தை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் கொண்டு சேர்த்துள்ளது. அக்ட்சியின் இளைஞரணித் தலைவரான அக்மால் நசிர், சட்டப் பிரிவுத் தலைவர் சியு சூன் மான் ஆகியோர் அப்புகாரை அளித்துள்ளனர்.

நேற்று பிரதமர் ஆற்றிய உரையில் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும் நாட்டின் இறையாண்மைக்குப் பங்கம் விளாஇவிக்கும் வகையில் இருப்பதாகவும் மேலும் அரசு அமைப்பு முறைக்குக் கலங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பிரதமரின் உரையில் தாம் பெரும்பான்மையை இழந்து விட்டதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார் என அக்மாலும் சியூவும் கூறினர்.

கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டவிதி 43 (4)இன்படி, மக்களையில் பிரதமர் பெரும்பான்மையை இழந்து விட்டால் அவர் பதவி விலக வேண்டும். அல்லது மாமன்னரால் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
ஆனால், பிரதமர் பதவியில் இருந்து விலகாமல், தொடர்ந்து அப்பதவியில் நிலைத்திருக்க ஆதரவு தரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறான சலுகைகளை வழங்கப்படும் என பிரதமர் தமது உரையில் கூறியதாக அக்மாலும் சியூவும் சொன்னார்கள்.

இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிரிவு 21இன் படி பிரதமர் மகியாதீன் குற்றாம் புரிந்துள்ளார் எனவும் பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கவோ அல்லது வாக்களிக்காமல் இருக்கவோ பொதுத் துறை அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கும் குற்றப்பின்னணி அவ்வுரையில்ல் இருந்ததாக அந்த இருவரும் குறிப்பிட்டனர்.

வெளிப்படையாக அவ்விரை தொகைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதால் ஊழல் தடுப்பு ஆணையத்தில் வெளிப்படையாகவே தமது தரப்பு புகார் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version