Site icon அநேகன்

கூட்டணியில் ஜ.செ.க. வேண்டாம் ! – பாஸ்

கோலாலம்பூர் | 14/8/2021 :-

மலேசிய அரசாங்கத்தில் ஜ.செ.க.வின் கூட்டணி இருக்கக் கூடாது எனும் முடிவில் பாஸ் கட்சி மிக உறுதியாக உள்ளதாக பாஸ் கட்சியின் உதவித் தலைவர் துவான் இபுராகிம் துவான் மான் கூறினார்.

முன்னதாக, ஜ.செ.க.வை இஸ்லாம் சமயத்திற்கும் மலாய் சமூகத்திற்கும் எதிரி என சித்தரித்திருந்தாலும் மக்கள் கூட்டணியில் அவ்விரு கட்சிகளும் ஒன்றாக இணைந்திருந்தன.

நேற்று பிரதமர் உரையில் குறிப்பிடப்பட்ட சில ‘வாய்ப்புகள்’ கோவிட்-19 இல் இருந்து விடுபடுவதற்கான வழியாகவும் தடுப்பூசித் திட்டத்தை வெற்றியடையச் செய்யக்கூடியதாகவும் அக்கட்சி எண்ணுகிறதாக அவர் சொன்னார்.

தடுப்பூசித் திட்டத்தை மிக விரைவில் நிறைவேற்றுவதும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதுமே அரசாஙகத்தின் நோக்கம் எனக் கூறிய சுற்றுச் சூழல் – நீர் வளத்துறை அமைச்சருமான அவர், பிரதமர் கூறிய ‘வாய்ப்புகள் யாவும் நேரடியாகக் கட்சிகளுக்கே எனத் தெரிவித்தார். ‘

Exit mobile version