கோலாலம்பூர் | 14/8/2021 :-
மகியாதீனின் பிரதமர் பதவி குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை அவர் மாமன்னரைச் சந்திக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவ்விவகாரம் குறித்து மிகவும் நெருங்கிய வட்டத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் நபரின் தகவலின் அடிப்படையில், அச்சந்திப்பு நண்பகலில் நடக்கலாம் என அறியப்படுகிறது.
தற்போது பிரதமர் பதவியில் மகியாதீன் தமது இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டதாக ஆருடங்கள் பரவி வருகின்றன எனவும் எந்த நேரத்திலும் பதவி விலகல் ஏற்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.
ஆனால். இது குறித்து சில அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் இல்லை என வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஸுரைடா கமாருடின் கூறினார்.
இதே பதிலைத்தான் பிரதமர் துறை அமைச்சர் ரெட்ஸுவான் முகம்மட் யூசோஃப் கூறியதாக சினார் ஹாரியான் ஊடகம் தெரிவித்தது.

