Site icon அநேகன்

பிரதமர் மகியாதீனின் இல்லத்தில் கட்சி நிர்வாகச் சந்திப்புக் கூட்டம் ! தலைமையேற்றார் அகமாட் ஃபைஸால் அஸுமு

கோலாலம்பூர் | 14/8/2021 :-

இன்று பிரதமர் மகியாதின் முகம்மது யாசினின் இல்லத்தில் நடந்த கட்சி கட்சி நிர்வாகக் கூட்டத்திற்கு பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் அகமாட் ஃபைஸால் அஸுமு தலைமையேற்றார்.

அது சார்ந்த செய்தி அறிக்கையை மிக விரைவில் வெளியிடுவார் என அவர் கூறினார்.

முன்னதாக, கட்சி சார்ந்த ஒரு சந்திப்புக் கூட்டம் இன்று நடத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாலை 5.45 மணி அளவில் அகமாட் ஃபைஸால் அஸுமுவின் வாகனம் மகியாதீனின் இல்லத்தில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்பட்டது.

அந்தச் சந்திப்புக் கூட்டத்திற்கு இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் வான் அகமாட் ஃபஷால் வான் அகமாட் கமால், பிரதமர் துறை அமைச்சர் முகம்மட் ரெட்ஸுவான் முகம்மட் யூசோஃப், பெண்கள், குடும்ப, சமூகநல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரீனா முகம்மட் ஹாருன், தற்காப்புத் துறை துணை அமைச்சர் இக்மால் ஹிஷாம். அப்துல் அஸிஸ், அனைத்துலக வானிபம், தொழில்துறை அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி ஆகியோர் பிரதமர் இல்லத்திற்கு வந்ததாகத் தெரிய வந்துள்ளது.

Exit mobile version