Site icon அநேகன்

பிரதமர் மகியாதீன் பெரும்பான்மையை இழந்து விட்டால் என்ன நடக்கும் ?

கோலாலம்பூர் | 15/8/2021 :-

புதியப் பிரதமராக யாரும் இன்னும் தங்களுக்கானப் பெரும்பான்மையை உறுதிப்படுத்தாததால் தாம் பதவி விலக வில்லை எனப் பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் கூறியுள்ளார்.

இதன்படி புதியப் பிரதமர் நியமிக்கப்பட முடியாததால் புதிய அரசாங்கம் அமைக்க முடியாது என அவர் கூறினார்.

ஒரு வேளை நாடாளுமன்றத்தில் பிரதமர் மகியாதினிக்கு எதிராகக் கொண்டுவரப்பட இருக்கும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தமக்கானப் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டால் என்ன நடக்கும் ?

1. மகியாதீன் பதவி விலகி, கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டவிதி 43(4) இன் படி நாடாளுமன்றத்தைக் கலைக்க மாமன்னருக்குப் பரிந்துரைப்பார்.

2. கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டவிதி 40(2) இன் படி, கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தால் அப்பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கலாமா வேண்டாமா என முடிவெடுப்பார்.

3. எருன்பான்மை இழந்ததன் காரணமாக மகியாதீன் பதவி விலகினால், ஒட்டு மொத்த அமைச்சரவியும் பதவி விலக வேண்டும்.

4. அடுத்தக் கட்டமாக, யார் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறாரோ அவரைப் பிரதமராக நியமிப்பது மாமன்னரின் கடமை.

5. கடந்த 2020 ஆம் ஆண்டில் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து தேசியக் கூட்டணிக்கு ஆட்சி மாற்றம் கண்டது போலவே புதிய ஆட்சி மாற்றம் நிகழவும் வாய்ப்புள்ளது.

Exit mobile version