Site icon அநேகன்

தேசியக் கூட்டணியை ஆதரிக்கும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அம்னோவுக்கே திரும்பி விடுங்கள் ! – காலிட் நோர்டின்

கோலாலம்பூர் | 15/8/2021 :-

தேசியக் கூட்டணியை ஆதரிக்கும் அம்னோவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறிப்பினர்கள் மீண்டும் அம்னோவுக்கே திரும்புதல் நலம் என முகம்மட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

மலாய்க்காரர்களின் வலுவான கட்சியாக உடுவெடுக்க அனைவரும் ஒற்றுமையும் ஒருமித்த ஓசையும் மிக அவசியம் என அவர் சொன்னார்.

பிரதமராக மகியாதீனும் தேசியக் கூட்டணி அரசாங்கமும் நாட்டைக் காப்பதில் தோல்வி அடைந்துள்ள இந்த நிலையில் தடம் மாறிப் போய் சிதறிக்கிடப்பதில் வலுவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் அம்னோ தமது பங்கினை முறையாக வகித்து வந்திருந்தாலும் அக்கூட்டணி தமது இலக்கை அடைவதில் தோல்வி கண்டுள்ளது.

தற்போது நிலவி வரௌ அரசிய நெருக்கடியைத் தீர்ப்பதில் அம்னோ தமது பங்கினை ஆற்ற வேண்டும் எனத் தெரிவித்த அவர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறூவதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதனை அடையை கட்சியின் அனைத்து நிலையிலும் ஒற்றூமையை உறுதி செய்ய வேண்டும என அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version