கோலாலம்பூர் | 15/8/2021 :-
நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் தங்களின் அரசியல் எதிரணியினருடன் கலந்துரையாட அனுமதிப்பக்கப்படுவார்கள் என ஜ.செ.ஜ.வின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கு முன்னதாக நம்பிக்கைக் கூட்டணியின் மூன்று முக்கியத் தலைவர்களான அன்வார் இபுராகிம் (பிகேஆர்), முகம்மட் சாபு (அமானா), லிம் (ஜசெக) ஆகிய மூவரும் தங்களுக்குள் இது குறித்து கலந்தாலோசித்து இது குறித்த ஒரு முடிவுக்கு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இது நம்பிக்கைக் கூட்டனியின் தலைமைத்துவ மன்றத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இருந்த போதிலும் அம்மூன்று முக்கியக் கட்சிகளும் தத்தம் கட்சியில் இது குறித்த ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.
முன்னதாக, பிரதமர் எதிர்க்கட்சியினருக்கு விடுத்து அழைப்பு குறித்து ஜ.செ.க. தேசியக் கூட்டணியோடு கலந்தாலோசனை நடத்தி விட்டதாகக் கூறப்பட்டு வந்தச் செய்தியை லிம் மறுத்துள்ளார்.
நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸை பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங், டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா ஆகியோர் இன்று காலை சந்தித்து விட்டதை பெயர் வெளீயிட விரும்பாத நபர் கூறியதாக சின் சியூ செய்தி வெளியிட்டிருந்தது.
பின்னர், இவ்விவகாரம் குறித்து ஜ.செ.க. தயார் நிலையில் இருக்கும் கட்சியாகவும் அதிகப்படியான சந்திப்புகள் செய்திருப்பதாகவும் பெயர் வெளியிட விரும்பாத ஒரு கூறியதை தி ஸ்டார் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
பிரதமர் விடுத்த அழைப்பு குறித்து அவர் வழங்க இருப்பதாகக் கூறப்பட்ட சலுகைகள் குறித்தும் ஜ.செ.க. செவி சாய்க்க வேண்டும் என ஓங் கியான் மிங்கும், டோனி புவாவும் வெளிப்படையாகக் கருத்துரைத்திருந்தனர்.
இருந்தும், நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றமும் இதர எதிர்க்கட்சிகளும் அந்த அழைப்புக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
மற்றிரு நிலவரத்தில், கோவிட்-19, பொருளாதாரம், அரசியல் ஆகிய நெருக்கடியைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ள அனைத்து கூறுகள் குறித்து நம்பிக்கைக் கூட்டணி திறந்த சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஜ.செ.க.வின் மூத்த அரசியல் தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
இருந்த போதிலும், இரண்டு முக்கியக் கொள்கைகளிம் அடிப்படையில் அஃது அமைய வேண்டும் எனக் குறிப்பிட்ட லிம் கிட் சியாங், முதலாவதாக கோவிட்-199 பெருந்தொற்றைக் கையாள்வதில் மாற்று வியூகம் கொண்டுருக்க வேண்டும் எனவும் அது ஜ.செ.க. – நம்பிக்கைக் கூட்டணி ஆகியவற்றின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

