Site icon அநேகன்

பெருந்திற்றுக் காலத்தில் பதவி விலகல் புதிதல்லவே ! – நஜிப் சொல்ல வருவது என்ன ?

கோலாலம்பூர் 15/8/2021 :-

பெரும்பான்மையை இழந்த நாட்டின் தலைவர் பதவி விலகுவது புதிதான ஒன்றல்ல. ஆனால், நம் நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுதில் நடப்பு அரசாங்கம் தோல்வி கண்ட பிறகு ஏற்படுகிறது என முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் கூறினார்.

இவ்வாறான நடவடிக்கை மனித நேயமற்றச் செயலாகவோ அல்லது காக்கப்பட வேண்டும் மக்களின் நிலையைப் புறந்தள்ளுவதோ ஆகாது.

நடப்பு அரசாங்கம் பல முறை தோல்வி கண்ட பிறகு நீதியை நிலை நாட்டவும் மக்களின் நலனுக்காகவும் யுக்தி மாற்றப்ப்பட வேண்டும்.

ஊரடங்கு சட்டத்தின்வழி கடந்த 7 மாதங்களாக முழு அதிகாரம் கொடுத்த பின்னர் 12 மடங்கு கோவிட்-19 நேர்வுகள் மிக மோசமாக அதிகரித்துள்ளது என நஜிப் கருத்துரைத்துள்ளார்.

முழு அடைப்பை மலேசியா மிகத் தாமதமாக நடைமுறை படுத்தியுள்ளது. கோவிட்-19 நேர்வுகள் மிக வேகமாக அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில் மக்களுக்குத் தேவையான உதவிகல் முறையாகச் செய்யப்படவில்லை.

தற்போது மலேசியா உலகளவில் கோவிட்-19 அன்றாட நேர்வுகளும் இறப்பு எண்ணிக்கையும் அதிகம் கொண்ட நாடாக விளங்குகிறது.

பங்குச் சந்தை முதலீட்டில் மலேசியா ஆசிய பசிபிக் நிலையில் மிக மோசமான நாடாகவும் உலகளவில் இரண்டாவது மோசமான நிலையிலும் உள்ளது.

இதனால், நாட்டின் பொருளாதாரம் 7%இல் இருந்து 3.5% முதல் 4% வரையில் மங்கியது.

இவ்வாறு 7 முக்கியத் தவறுகளை நடப்பு அரசாங்கம் செய்துள்ளது. பல முறாஇ நினைவுப்படுத்தியும் அதனை கண்டுகொள்ளவே இல்லை.

இது போன்று மிக மோசமான நிலையில் மற்ற நாடுகள் இல்லை என்றாலும், கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதில் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு பல நாடுகளில் புதியவர்களுக்கு வழி விட்டுள்ளனர்.

இஆரு தமது கருத்தைப் பதிவு செய்த நஜிப், கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்ட உலகத் தலைவர்கள் தமது பதவியில் இருந்து விலகிய நாடுகளின் பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

அவை இத்தாலி, பிரான்சு, ஸ்லோவாக்கியா, மங்கோலியா, துனிசியா, சுவீடன், நேப்பால், இந்தியா ஆகியன ஆகும்.

Exit mobile version