கோலாலம்பூர் | 15/8/2021 :-
மகியாதீன் பதவி விலகல் குறித்தும் அடுத்தப் பிரதமர் யார் என்பது குறித்தும் பலதரப்பட்டக் கருத்துகள் உலா வந்து கொண்டிருக்கயில், புதிய அரசாங்கத்தை அமைக்க அன்வார் இபுராகிமும் வாரிசான் கட்சித் தலைவர் ஷாஃபி அப்டாலும் இணைந்து மக்கள் தேர்தெடுத்த நம்பிக்கைக் கூட்டணியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஜ.செ.க. வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த ஜ.செ.க.வின் பொதுச் செயலாளர் லிம் குவன் எங், தேசியக் கூட்டணியின் தவறான ஆட்சியை சரி செய்ய கண்டிப்பாக ஒரு மாற்று வழி இருக்கும் என அவர் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி எதிர்க்கட்சி அணியாக 105 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. எனவே, காலம் தாழ்த்தாமல் அரசியல் அமைப்புச் சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக ஒரு குடையின் கீழ் இயங்க சரியான வழிமுறையைக் கையாள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஒட்டு மொத்த தேசியக் கூட்டணியும் பிரச்சனையாக இருக்கின்ற நிலையில் தோல்வி கண்ட அதனுடன் இணைந்திருப்பது தீர்வாகாது என லிம் குவான் எங் மேலும் சொன்னார்.

