Site icon அநேகன்

அரண்மனைக்கு வந்ந்தேசிய வழக்கறிஞர் இட்ருஸ் ஹாருன் !

கோலாலம்பூர் | 16/8/2021 :

காலை 10.47 மணி அளவில் இரண்டு வாகங்கள் அரண்மனையின் நுழைவாயில் 1இன் நுழைந்தன. அதில் ஒன்று தேசிய வழக்கறிஞர் தான் ஶ்ரீ இட்ருஸ் ஹாருனின் வாகணம் என நம்பப்படுகிறது.

மகியாதீனின் பதவி விலகல் குறித்து கூட்டரசு அரசியலமைப்புச் சட்டவிதிப்படி ஆலோசனை வழங்க அவர் அங்கு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இருந்த போதிலும், இது வரையில் அவ்விவகாரம் குறித்து ஊடகவியலாளர்களிடம் எந்தவித உறுதிப்பாடும் தெரிவிக்கப்படவில்லை.

ஏறத்தாழ 100 ஊடகவியலாளர்கள் அரண்மனை நுழைவாயில் 1 வளாகத்தில் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
நண்பகல் 12.00 மணி அளவில் அரண்மனைக்கு பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version