Site icon அநேகன்

மனிதவள அமைச்சராக இதுவே எனது இறுதி நிகழ்ச்சியாக இருக்கலாம் ! – டத்தோ ஶ்ரீ சரவணன்

கோலாலமொஊர் | 16/8/2021 :-

பெர்க்கேசோ வாரியம், பெர்க்கேசோ முதலீட்டு குழுமம் ஆகியவற்றின் உறுப்பினர் நியமத்தை மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் அதிகாரப்பூர்வாக நிறைவு செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சி குறித்து முகநூலில் பதிவிட்ட அவர்,மனிதவள அமைச்சராக  இஃதுவே அவரது இறுதி நிகழ்ச்சியாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தமக்கு வழங்கிய பொறுப்பிகளை இயன்றவரை சிறப்பாக செய்திருப்பதாகவும் தொழிலாளர் சமூகத்தின் நலனுக்காகத் தமது கடமைகளையும் ஆற்றிருப்பதாகத் தாம் எண்ணிவதாகத் தெரிவித்தார்.

தொழிலாளார் சமூகத்தின் நலனை பெர்க்கேசோ தொடர்ந்து பாதுகாத்து வரும் என நம்பிக்கைத் தெரிவித்த டத்தோ ஶ்ரீ சரவணன், புதிதாக நியமனம் பெற்றுள்ள பெர்க்கேசோ வாரியம், பெர்க்கேசோ முதலீட்டு குழுமம் ஆகியவற்றின் உறுப்பினர்களுக்குத் தமது வாழ்த்துகளையும் கூறினார்.

Exit mobile version