Site icon அநேகன்

பதவி விலகல் கடிதத்தை மாமன்னரிடம் அமைச்சரவை வழங்கியது ! கைரி ஜமாலுதீன்

கோலாலம்பூர் | 16/8/2021 :-

அமைச்சரவையினர் தங்களின் பதவி விலகல் கடிதத்தை மாமன்னரிடம் வழங்கினர். அதனை அம்னோவின் அமைச்சரான கைரி ஜமாலுதீன் தமது சமூக ஊடகத்தில் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.

மீண்டும் நாட்டிற்காக சேவையாற்ற இரு வாய்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமது நன்றியினை அதில் குறிப்பிட்டார்.
மலேசியாவை இறைவன் ஆசீர்வதிக்கட்டும் எனவும் அதில் சொன்னார்.

இருந்த போதிலும், இது வரையில் அரண்மனையில் இருந்தோ அல்லது அரசாங்கச் செயலாளரிடம் இருந்தோ எந்தவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

Exit mobile version