கோலாலம்பூர் | 16/8/2021 :-
அண்மைய காலங்களில் நம் நாட்டில் தொடர்ந்து உயர்வு கண்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் கிம்மாவின் 43வது பேராளர் மாநாடு இயங்கலை மூலமாக நாடு முழுவதும் உள்ள பேராளர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாடு நேற்று (15/8/2021) தலைநகரில் உள்ள உலக வணிக மையம் அம்னோ அரங்கில் (auditorium) கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
கிம்மாவின் இந்த பேராளர் மாநாடு சங்க பதிவு இலாகா மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனையின் கீழ் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடைபெற்றது.
முன்கூட்டியே தொகுதி கூட்டங்களின் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள பேராளர்கள் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே இயங்கலை மூலமாக இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
கடந்த 29.05.2021 இல் நடைபெற்ற கிம்மா உச்ச மன்றக் கூட்டத்தில் பெரும்பாலான உச்ச மன்ற உறுப்பினர்களின் அனுமதியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இம்மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பாலான தொகுதிகளின் ஒப்புதல் கீழ் 2020-2023 தவணை காலத்திற்கான உயர் மற்ற பதவிக்கான போட்டிகளை ஒத்தி வைத்து கடந்த தவணையில் பேராளர்களால் தேர்வு பெற்று வெற்றி பெற்ற அனைத்து பொறுப்பில் இருக்கக்கூடியவர்களின் பதவிகளை இன்னும் ஒரு தவணைக்கு (2020-2023) நிலை நிறுத்தி முடிவு செய்யப்பட்டது.
இம் முடிவின் வழி கிம்மாவின் தேசியத் தலைவராக மீண்டும் டத்தோஸ்ரீ ஹாஜி சைட் இப்ராஹிம் காதிர் அவர்களும், துணைத் தலைவராக ஹரிஷ்ராஜடின் அவர்களும் பொறுப்பேற்கிறார்கள்.
மேலும் உதவி தலைவர்கள், உச்ச மன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த தவணையில் பேராளர்களால் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்ற அனைவர்களின் பதவிகளும் நிலை நிறுத்தப்பட்டன.
அதேவேளையில் இம்மாநாட்டில் மாநிலத்தில் உள்ள பேராளர்களின் சார்பாக மாநில தலைவர்கள் தங்கள் தீர்மானங்களை தாக்கல் செய்தார்கள். தாக்கல் செய்யப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் கிம்மாவின் தேசியத் தலைவர் அவர்கள் இனிதே விளக்கம் அளித்து சில தீர்மானங்களை பேராளர்கள் ஆதரவோடு ஏற்றுக்கொண்டார்கள்.
நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இம்மாநாடு சுமார் 5.00 மணி அளவில் முடிவடைந்தது.

