Site icon அநேகன்

செமினியில் ஐபிஎப் கட்சி ஏற்பாட்டில் 150 குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டன !

செமினி | 16/8/2021 :-

இங்குள்ள பி40 மக்களின் நலனுக்காக ஐபிஎப் உலுலங்காட் தொகுதி ஏற்பாட்டில் 150 குடும்பங்களுக்கு
இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டன என தேசிய இளைஞர் அணித் தலைவர் எஸ். கணேஷ்குமார்
சம்பந்தன் கூறினார்.

மேலும், கோவிட் 19 பொது தொற்று முடக்கத்தால் இவர்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு நாடு தழுவிய நிலையில் ஐபிஎப் கட்சி உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வசதி குறைந்த மக்களுக்கு உதவ அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதில், செமினி சட்டமன்ற உறுப்பினர் துவான் ஜகாரியா, தேசிய ஐபிஎப் பொதுச்செயலாளரும்
உலுலங்காட் பிரிவின் தலைவருமான மோகன், தேசிய மகளிர் பகுதி தலைவி ராஜம்மாள் ஆகியோருடன் கட்சி பொறுப்பாளர்கள் இணைந்து பொதுமக்களுக்கு காய்கறிகளை வழங்கினார். இதற்கிடையில்,
டத்தோ ஸ்ரீ சண்முகம் ராமசாமி & டாக்டர். குமாரசாமி, பெர்மை பாலி கிளினிக் இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செய்ய உறுதுணையாக இருந்தவர்கள் மற்றும் அனைவரும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என‌ எஸ். கணேஷ் குமார் சம்பந்தன் கூறினார்.

Exit mobile version