கோலாலம்பூர் | 18/8/2021 :-
இவ்வாரம் வெள்ளிக்கிழமை மாமன்னர் மலாய் ஆட்சியாளர்களின் சிறப்பு சந்திப்புக் கூட்டத்தை நடத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆங்கில நாளேடு தெ ஸ்டார் தகவல் வெளியிட்டுள்ளது.
அரண்மனையில் நடக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்படும் அந்தச் சந்திப்புக் கூட்டத்தில் அடுத்தப் பிரதமர் குறித்தும் 220 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதமர் வேட்பாளர் குறித்தும் அதில் பேசப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் முக்கிய முடிவை மாமன்னர் எடுக்கவிருப்பதால், மலாய் ஆட்சியாளர்களுடனான அச்சந்திப்புக் கூட்டம் மிக அவசியமாகிறது. அந்தச் சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பிறகு பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறலாம் என அந்தச் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

